» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள்: விஜய் வசந்த் எம்பி மரியாதை!

புதன் 29, நவம்பர் 2023 3:24:15 PM (IST)



கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு விஜய் வசந்த் எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தனது நகைச்சுவை மூலம் தமிழ் சினிமாவில் புரட்சிக்கு வித்திட்ட கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘கலைவாணர்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவரது 115 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் முன்னிலையில் நாகர்கோவில் மணிகூண்டு சந்திப்பில் அமைந்துள்ள என். எஸ். கே திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory