» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 5921 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு: எஸ்.பி., பாராட்டு!
வெள்ளி 15, செப்டம்பர் 2023 8:30:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5921 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசும்பொன்நகர் பகுதியில் 22 மின்கம்பங்கள், நீர்தேக்க தொட்டி 1, பொதுசுவர் 9, பாலம் 1 என 33 இடங்களிலும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூச்சிக்காடு, திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாந்துறைவிளை,
ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெட்சுமிபுரம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுநாடார்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் 37 மின்கம்பங்களிலும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்புளியங்குடி பகுதியில் மின்கம்பங்கள் 5, பொதுசுவர் 2, பாலம் 1 என 8 இடங்களிலும்,
விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துவாய்பட்டி, குமாரகிரிபுதூர் ஆகிய பகுதிகளில் 34 மின்கம்பங்கள், நீர்தேக்க தொட்டி 2, தெருக்குழாய் 1 என 37 இடங்கள் உட்பட இன்று ஒரே நாளில் மொத்தம் 115 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.
இதுவரை மொத்தம் 5921 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)

ஒரே நாளில் 13 கனரக டாரஸ் வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:32:23 AM (IST)


.gif)
TN69Sep 15, 2023 - 08:45:38 PM | Posted IP 172.7*****