» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரள கழிவுகள் குவிப்பதை தடுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!

வெள்ளி 15, செப்டம்பர் 2023 7:53:23 PM (IST)

கேரளாவிருந்து பல்வேறு விதமான கழிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் குவிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தியுள்ளார். 

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட துணை ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டு வந்த‌ கழிவு பொருட்கள் கொட்டப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. இதை தடுப்பதற்கு பல்வேறு‌ சட்டங்கள் இருந்த போதிலும் இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகள் இங்கு லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.‌ இது சுற்று வட்டாரத்தில் சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. ஆதலால் கேரளா எல்லையில் உள்ள நமது சோதனை சாவடிகளில் சோதனையை பலப்படுத்தி, கழிவுகள் எதுவும் நமது மாவட்டத்திற்கு கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory