» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)

தாய்லாந்து நாட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள், தாத்தா, பாட்டி மற்றும் தாக்குதல் நடத்திய மாணவன் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு வடமேற்கே உள்ள 'டெப்சிரின் நோந்தபுரி' பகுதிக்கு அருகே உள்ள மேல்நிலைப்பள்ளியில், அம்மாணவன் திடீரெனத் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் பள்ளியில் இருந்த 3 ஆசிரியர்கள் மற்றும் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்திய மாணவன், பள்ளிக்கு வருவதற்கு முன்பாகத் தனது வீட்டில் இருந்த தாத்தா மற்றும் பாட்டியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான். பின்னர் பள்ளிக்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, இறுதியில் தன்னையும் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கியை எடுத்து வந்தே அம்மாணவன் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளான். மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான துல்லியமான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகப் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு தாய்லாந்தில் 17 வயது சிறுவன் ஒருவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


