» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!

சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

Nepalrescue.jpg

நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 633 ஆக அதிகரித்துள்ளதுடன், சுமார் 3,000 பேரைக் காணவில்லை என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் ஓடும் போடே கோஷி ஆற்றில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திடீரெனப் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றோரப் பகுதிகளில் இருந்த வீடுகள், கட்டடங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டு, பல கிராமங்கள் உருத்தெரியாமல் அழிந்துள்ளன.

இப்பேரிடரில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் உட்படப் ஏராளமான வெளிநாட்டினரும் சிக்கி மாயமாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனிடையே, திபெத் எல்லையோரப் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாகவும், 550 பேரைக் காணவில்லை என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 13,000-க்கும் மேற்பட்ட மீட்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு, ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் மூலம் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளின் போது கண்டெடுக்கப்படும் அடையாளம் தெரியாத உடல்களை உடனடியாக அடக்கம் செய்ய நேபாள அரசு முடிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory