» செய்திகள் - விளையாட்டு » உலகம்
95 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: பிரிட்டன் பூங்காவில் உலக சாதனை படைத்த அரிய பறவை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:23:54 PM (IST)

பிரிட்டனில் உள்ள செஸ்டர் விலங்கியல் பூங்காவில், உலகிலேயே மிக அரிய வகையான ஆப்பிரிக்க 'செக்ரட்டரி பேர்ட்' இனத்தைச் சேர்ந்த 5 பறவைக் குஞ்சுகள் ஒரே நேரத்தில் பொரித்துள்ளன. இந்த பூங்காவின் 95 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 12 மாதங்களில் ஒட்டுமொத்த ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல்வேறு பறவைகள் பாதுகாப்பு மையங்களையும் சேர்த்து, வெறும் 3 செக்ரட்டரி பேர்ட் குஞ்சுகள் மட்டுமே பொரித்திருந்தன. ஆனால், தற்போது பிரிட்டனின் இந்த ஒரே பூங்காவில் மட்டும் 5 குஞ்சுகள் வெற்றிகரமாகப் பொரிந்திருப்பது பறவையின ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச பறவைகள் இனப்பெருக்கப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வரும் 'ஜான்' மற்றும் 'ஜோலின்' என்ற ஜோடிப் பறவைகளுக்கே இந்த 5 குஞ்சுகளும் பிறந்துள்ளன.ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் 'செக்ரட்டரி பேர்ட்' பறவைகள், காற்றில் பறந்து வேட்டையாடுவதை விடத் தங்களது நீண்ட கால்களால் தரையில் உள்ள விஷப் பாம்புகளை மிதித்துக் கொன்று வேட்டையாடும் அசாத்திய திறன் கொண்டவை.
தற்போது காடுகளில் இவற்றின் எண்ணிக்கை 6,700-க்கும் குறைவாகச் சரிந்துவிட்டதால், சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கம் (IUCN) இவற்றை 'அழிந்து வரும் இனம்' என அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பிரிட்டன் பூங்காவில் ஒரே நேரத்தில் 5 குஞ்சுகள் பிறந்திருப்பது உலகளவில் இயற்கை மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


