» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் மக்கள் கொந்தளிப்புஎதிரொலி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 5:10:06 PM (IST)
எரிபொருள் விலை உயர்வால் மக்கள் மத்தியில் எழுந்த கடும் கொந்தளிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பை அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று நள்ளிரவு வெளியிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளில் (அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான்) நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தியது.இந்த அதிரடி உயர்வால், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.458.41-க்கும், டீசல் ரூ.520.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சுமார் 43% முதல் 55% வரை விலை உயர்ந்ததால், மக்கள் சாலைகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டத்தை அடுத்து, நேற்று நள்ளிரவு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ள போதிலும், மக்களின் பாரத்தைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான வரியைக் குறைப்பதன் மூலம் லிட்டருக்கு 80 ரூபாய் குறைக்கப்படுகிறது. இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.378-க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலைக்குறைப்பு அடுத்த ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்."மேலும், போர்ச் சூழல் சீரடைந்தவுடன் எரிபொருள் விலைகள் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இலவசப் பேருந்து பயணம் - மானியங்கள்:
விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டுள்ளது: தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் அரசுப் பேருந்துகளில் அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் ஆரஞ்சு லைன் மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ பேருந்துகளிலும் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு லிட்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ரயில்வே கட்டணங்களில் இதுவரை எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. அரசின் இந்த உடனடி நடவடிக்கைகள் பாகிஸ்தான் மக்களிடையே ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரிவினைவாதிகளின் குற்றச்செயல்களுக்கு இடம் இல்லை: இந்தியாவிடம் நியூசிலாந்து பிரதமர் உறுதி!
செவ்வாய் 7, ஜூலை 2026 12:26:02 PM (IST)

இலங்கையில் 2-வது நாளாக நீடித்த சிறை மோதல்: 25 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:54:53 AM (IST)

நியூயார்க் புரூக்ளின் பாலத்தில் பயங்கர தீ விபத்து: சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பரபரப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 12:40:38 PM (IST)

உக்ரைனின் முக்கிய நகரைக் கைப்பற்றியது ரஷ்யா: புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 4, ஜூலை 2026 3:35:07 PM (IST)

அமெரிக்க மண்ணில் பிறந்தால் குடியுரிமை: நீதிமன்றம் உத்தரவு - அதிபர் டிரம்புக்குப் பலத்த பின்னடைவு!
வியாழன் 2, ஜூலை 2026 5:19:07 PM (IST)

நிச்சயமற்ற சர்வதேச சூழலில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு மிக முக்கியம்: ஜப்பான் பிரதமர் பேட்டி!
புதன் 1, ஜூலை 2026 5:04:56 PM (IST)


