» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!

திங்கள் 9, மார்ச் 2026 11:38:21 AM (IST)

ஈரானின் புதிய உச்ச தலைவராக மறைந்த கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவப் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டன. இதில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீதும் ஈரானின் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலின் மிரட்டலுக்கு மத்தியில், ஈரானின் மதகுருமார்களைக் கொண்ட நிபுணர்கள் சபை அடுத்த உச்சத் தலைவரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. 56 வயதான மோஜ்தபா, இனி ஈரானின் ராணுவம் மற்றும் புரட்சிகரப் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory