» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஊழல் புகார் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் மனைவிக்கு 20 மாதம் சிறை தண்டனை!

வியாழன் 29, ஜனவரி 2026 8:28:35 AM (IST)



ஊழல் புகார் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் மனைவிக்கு 20 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல். கடந்த 2024-ம் ஆண்டு அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் வடகொரியாவின் தலையீடு மற்றும் எதிர்க்கட்சியினர் நெருக்கடி காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்து ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார். கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து அவசரநிலை பிரகடனம் திரும்பப்பெறப்பட்டது.

தொடர்ந்து அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவருடைய பதவி பறிக்கப்பட்டது. மேலும் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிகார துஷ்பிரயோக வழக்கில் ஏற்கனவே அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

யூன் சுக் இயோலின் மனைவி கிம் யோ ஹீ (52). இவரது கணவரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து கிம் யோ ஹீயும் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டன.

இதுதொடர்பான விசாரணை சியோல் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில் கிம் யோ ஹீ, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்து பரிசாக கிடைக்கப்பெற்ற ரூ.25 கோடி வைர நெக்லசை பயன்படுத்தியதற்காவும், அரசு வேலைக்காக பலரிடம் இருந்து ரூ.8 கோடி வரை (12.85 மில்லியன் வோன்) முறைகேடாக பெற்றதும், அந்த நாட்டின் பங்குச்சந்தையை மோசடி செய்தது மற்றும் தேவாலயத்திற்கு ஆதரவாக செயல்பட்டதும் உள்ளிட்ட குற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன.

இதுதொடர்பாக யூன் சுக் இயோலின் மனைவி கிம் யோ ஹீக்கு 20 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக கோர்ட்டு அறிவித்தது. மேலும் வைர நெக்லஸ், ரூ.12 கோடி ரொக்கம் ஆகியவற்றை உடனடியாக கோர்ட்டிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இந்த தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டவுடன் கோர்ட்டு உத்தரவை ஏற்பதாகவும், பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தென் கொரிய வரலாற்றில், முன்னாள் அதிபர் தம்பதியர் இருவரும் ஒரே நேரத்தில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவது இதுவே முதல் முறை. அவசரநிலை பிரகடனம் செய்த வழக்கில் அதிபர் தம்பதிக்கு அடுத்த மாதம் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory