» செய்திகள் - விளையாட்டு » உலகம்
புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரேசில் நாட்டில் உள்ள சுதந்திர தேவியின் சிலை, புயல் காற்றில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரேசில், குவாய்பா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 11 மீட்டர் அடித்தளத்தில் 24 மீட்டர் உயர சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டது. மொத்தம் 114 அடி உயரமாகும். இந்த நிலையில், தெற்கு பிரேசிலில் கடந்த வாரம் உருவான புயல் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடானது.
இந்த புயலானது கடந்த திங்கள்கிழமை குவாய்பா பகுதியைக் கடக்கும் போது, பலத்த காற்று வீசியுள்ளது. இதன்காரணமாக, 24 மீட்டர் உயர சுதந்திர தேவியில் சிலை சரிந்து தரையில் விழுந்து, துண்டுதுண்டாக உடைந்தது. இந்த சிலை அசையத் தொடங்கியவுடன் வணிக வளாகத்தின் நிர்வாகத்தினர் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், அனைத்து தொழில்நுட்ப தர நிலைகளையும் பின்பற்றிதான் இந்த சிலை அமைக்கப்பட்டதாக வணிக வளாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ள நிலையில், பிரேசில் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)


.gif)