» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் இருந்து சீனா சென்ற எண்ணெய் கப்பல்.. 2021ம் ஆண்டிற்கு பிறகு முதல்முறை!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:39:32 PM (IST)

இந்தியாவில் இருந்து 2021ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக எண்ணெய் கப்பல் சீனாவுக்கு சென்றுள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக விதித்த தடைகள் காரணமாக இந்திய, ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாயரா நிறுவனத்தின் எண்ணெய் கப்பல்கள் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே குஜராத்தின் வடினார் துறைமுகத்தில் இருந்து நயாரா நிறுவன எண்ணெய் கப்பல் சீனா புறப்பட்டது.

மலேசியாவிற்கு செல்ல வேண்டிய கப்பல், பொருளாதார தடைகளால் சீனாவின் சூஷான் துறைமுகத்திற்கு செல்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து 5 லட்சம் பேரல் டீசல் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. லடாக் எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா - சீனா உறவு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கு பிறகு இந்திய எண்ணெய் கப்பல் சீனாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory