» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா மீது விதித்த வரியால், ரஷியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு : டிரம்ப்
புதன் 13, ஆகஸ்ட் 2025 4:41:06 PM (IST)
இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள் காரணமாக ரஷியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக கடந்த மாதம் 30-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் படி கடந்த 7-ந்தேதி இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரியை விதித்தார். இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது. கச்சா எண்ணை வாங்குவதன் மூலம் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் இந்தியா மீது அமெரிக்கா விதித்த அதிக வரிகளால் ரஷியாவின் பொருளாதாரத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படவில்லை. உலகளாவிய அழுத்தங்கள் மற்றும் இந்தியா உள்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரிகள் காரணமாக ரஷியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரஷியா தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரஷியா மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது. சிறப்பாகச் செயல்பட அவர்களிடம் மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. வரிகள்-வர்த்தகங்கள் மூலம் அமெரிக்கா தனது வருவாயை ஈட்டுவதுமட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உள்பட 5 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தது.
உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், வரும் 15-ந்தேதி ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். அதில் முதல் 2 நிமிடங்களில் ஒப்பந்தம் ஏற்படும் தகுதி உள்ளதா இல்லையா என்பது எனக்கு சரியாக தெரிந்து விடும். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்த்து இருக்கிறேன். இரு தரப்புக்கும் இடையே சிறந்த ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் என நான் பார்க்க விரும்புகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்: சீனா உறுதி
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 10:11:36 AM (IST)

இந்தியாவுடனான வர்த்தக மோதல் பாதிப்பை ஏற்படுத்தும் : டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே எச்சரிக்கை
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:42:38 PM (IST)

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்: ரஷ்யா அறிவிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:15:30 AM (IST)

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : அமெரிக்கா விளக்கம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:12:27 AM (IST)

குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:35:27 AM (IST)

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
சனி 16, ஆகஸ்ட் 2025 12:14:42 PM (IST)
