» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் ஓடுபாதையில் 2 விமானங்கள் மோதி விபத்து: தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 5:16:17 PM (IST)



அமெரிக்காவின் கலிஸ்பெல் விமான நிலைய ஓடுபாதையில் நின்று கொண்டிருந்த விமானம் மீது மற்றொரு விமானம் மோதியது. இதனை தொடர்ந்து தீப்பிடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் புல்மேன் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் விமானி உள்பட 4 பேர் பயணித்தனர். மொன்டானா மாகாணம் கலிஸ்பெல் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தறிகெட்டு ஓடியது.

பின்னர் ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு விமானம் மீது மோதியது. சிறிது நேரத்தில் அந்த விமானம் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதனையடுத்து அருகில் நின்று கொண்டிருந்த விமானத்துக்கும் தீ பரவியது. இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது.

எனவே அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மற்றொருபுறம் விமானத்தில் இருந்த காயம் அடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் நின்று கொண்டிருந்த விமானத்தில் பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் விமான நிலையம் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory