» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணைகளால் தகர்ப்போம்: பாக்.ராணுவ தளபதி மிரட்டல்!

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 5:51:34 PM (IST)



சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர் மிரட்டல் விடுத்துள்ளார். 

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டட்டும் என்றுதான் நாங்கள் காத்திருக்கிறோம். அணை கட்டினால், 10 ஏவுகணைகளால் அதை அழிப்போம். சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. எங்களிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏதுமில்லை” என்றார்.

மேலும், எதிர்காலத்தில் 'இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் உலகின் பாதி நாடுகளை அழித்துவிடுவோம் என்ற தொனியிலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியுள்ளார். ஏற்கனவே வரிவிதிப்பால் இந்தியா - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில் அமெரிக்க மண்ணில் இருந்தவாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தளபதி மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்த இந்தியா, அந்த நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரண்டு போன பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏதிராக ஆத்திரமூட்டும் வகையில் கருத்துகளை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory