» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய இந்தியா விருப்பம்: டிரம்ப் சொல்கிறார்
ஞாயிறு 18, மே 2025 11:11:41 AM (IST)
அமெரிக்க பொருட்கள் மீதான வரிவிதிப்பை 100 சதவீதம் ரத்துசெய்ய இந்தியா விரும்புகிறது என்று டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது: உலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வர்த்தகம் செய்வதை ஏறத்தாழ சாத்தியமற்றதாக அவர்கள் ஆக்கி விட்டனர். அமெரிக்க பொருட்களுக்கு விதித்த வரிவிதிப்பை 100 சதவீதம் ரத்து செய்ய இந்தியா விரும்புவது உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். ஆனால் நான் அவசரப்படவில்லை. ஒவ்வொரு நாடும் எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. தென்கொரியா எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் எல்லா நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதில்லை. அதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப் போகிறேன். ஒப்பந்தம் செய்ய 150 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அதே சமயத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வர்த்தக ஒப்பந்தம் குறித்து தெரிவித்த கருத்து, முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது சிக்கலான ேபச்சுவார்த்தை. எந்த வர்த்தக ஒப்பந்தமும் இருதரப்புக்கும் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். இதுதான் வர்த்தக ஒப்பந்தம் பற்றிய எங்களது எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை
இதற்கிடையே, மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க வர்த்தக மந்திரி ஹோவர்டு லுட்னிக், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் சில வரிச்சலுகைகளை எதிர்பார்க்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு
வெள்ளி 18, ஜூலை 2025 12:49:38 PM (IST)

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்
வியாழன் 17, ஜூலை 2025 5:26:05 PM (IST)

ஒரு கணம் கூட விவாகரத்துப் பற்றி சிந்தித்ததே கிடையாது: மிச்சல் ஒபாமா விளக்கம்!
வியாழன் 17, ஜூலை 2025 3:28:56 PM (IST)

நிமிஷாவை செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!
வியாழன் 17, ஜூலை 2025 11:46:44 AM (IST)

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடை: இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!
புதன் 16, ஜூலை 2025 10:45:54 AM (IST)

இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)

SOORIYANமே 18, 2025 - 11:26:21 AM | Posted IP 172.7*****