» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஐரோப்பிய தயாரிப்பு மதுபானங்களுக்கு 200% வரி : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
வெள்ளி 14, மார்ச் 2025 5:55:20 PM (IST)
அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்தால் ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். தற்போது அவரது கவனம் மதுபானங்கள் மீது திரும்பி உள்ளது. இது குறித்து டிரம்ப் கூறியதாவது: அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்தால், பதிலுக்கு அமெரிக்காவிலும் வரி அதிகரிக்கப்படும். எனவே ஐரோப்பிய யூனியன் இந்த வரியை உடனடியாக நீக்க வேண்டும்.
இல்லையென்றால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து வரும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும். இந்த அதிகப்படியான வரி விதிப்பு அமெரிக்காவில் உள்ள மதுபான வணிகத்திற்கு பயன் அளிக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி : அமெரிக்க அதிபர் உத்தரவு
திங்கள் 5, மே 2025 11:48:08 AM (IST)
