» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் உயிரிழப்பு

சனி 17, பிப்ரவரி 2024 12:46:40 PM (IST)

ரஷியாவில அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த  எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழந்தார்.

புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

அலெக்ஸே நவல்னி. ‘எதிர்கால ரஷ்யா’ என்ற அரசியல் கட்சியின் தலைவர். வழக்கறிஞர், ஊழலை - அதிலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்துவருவதாக நம்பப்படும் ஊழலை தீவிரமாக எதிர்த்தவர். எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான இவர், ரஷ்ய நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டும், ஊழல் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர்.நவல்னியைக் கைது செய்ததைக் கண்டித்து ரஷ்யாவில் மாபெரும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. 

ஜனநாயகத்தை மீட்கவும் ஊழலை ஒழிக்கவும் தொடர்ந்து பாடுபடும் அவரை ஜனநாயகவாதிகள் ஆதரிக்கின்றனர். புதினுக்கு அவர் பெரிய தலைவலியாக இருந்தார். புதின் செய்ததாகக் கூறப்படும் ஊழலை மட்டுமல்ல... சர்வாதிகாரப் போக்கையும் அவர் எதிர்த்தார். அரசியல் சித்தாந்தங்களில் அவர் மிதவாதியாகவும் நடுநிலையாளராகவும் இருந்தார். இதனால், அவர் புதிதாகத் தொடங்கிய கட்சியைக்கூட சட்டப்படி பதிவுசெய்ய விடாமல் தொடர்ந்து தடைகளை ரஷ்ய அரசு ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory