» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளம்பெண்: 2 பேர் படுகாயம்

செவ்வாய் 13, பிப்ரவரி 2024 8:18:28 AM (IST)



அமெரிக்க தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 வயது சிறுமி உள்பட 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளம்பெண்ணை போலீசார் சுட்டு கொலை செய்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் லேக்வுட் பகுதியில் தேவாலயம் ஒன்று உள்ளது. 16 ஆயிரம் பேர் வரை அமரும் வசதி கொண்ட இந்த பெரிய தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த ஆலயத்துக்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணும் வந்திருந்தார். அவர் வழிபாடு நடைபெற்று கொண்டிருக்கும்போதே திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த பெண் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அதனை வெடிக்க செய்ய போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து அங்கு சாதாரண உடையில் வந்திருந்த 2 போலீசார் அந்த பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். பின்னர் அவர் வைத்திருந்த பையை கைப்பற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால் அதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

இதற்கிடையே அந்த பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 வயது சிறுமி உள்பட 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் அந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory