» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென்கொரியாவை அச்சுறுத்த பீரங்கி குண்டுகளை வீசிய வடகொரியா: போர் மூளும் அபாயம்!

வெள்ளி 5, ஜனவரி 2024 5:29:58 PM (IST)



தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா திடீரென  200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. அணு ஆயுத சோதனை மேற்கொண்டு உலக நாடுகளை அவ்வப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் வடகொரியா தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்து வந்தது.

இந்நிலையில், தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. தென்கொரியாவின் யோன்பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை 9 மணிக்கு வடகொரியா பீரங்கி மூலம் குண்டுகளை வீசியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன்பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல்பகுதியில் விழுந்தன. இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. 

தாக்குதலையடுத்து தீவுப்பகுதியில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தென்கொரிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, பீரங்கி தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ள தென்கொரியா, அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் வடகொரியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory