» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலியாவில் புயல்; கனமழை - 9 பேர் பலி - விமான சேவை பாதிப்பு!

புதன் 27, டிசம்பர் 2023 3:49:00 PM (IST)

ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண தலைநகரான சிட்னியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் உலகின் பரபரப்பு மிகுந்த விமான நிலையங்களில் ஒன்றான சிட்னி விமான நிலையத்திற்குள் நீர் புகுந்து கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் சிட்னி நகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சிட்னி விமான நிலையத்தில் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்த நாட்டின் விமான போக்குவரத்து துறை அறிவித்தது.இதனால் சிட்னி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாகாணங்களுக்கும் புறப்பட தயாராக இருந்த 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஓடுதளத்தில் தண்ணீரில் மூழ்கியபடி அவை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிட்னிக்கு வர முயன்ற 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் பிரிஸ்பேன், மெல்போர்ன் நகர் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலங்களில் கடுமையான புயல்கள் தாக்கியதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். மரங்கள் மற்றும் மின் கம்பிகளை விழுந்ததில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory