» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பருவநிலை உச்சிமாநாடு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது: நன்றி துபாய்!- பிரதமர் கருத்து
சனி 2, டிசம்பர் 2023 4:21:31 PM (IST)

"பருவநிலை உச்சிமாநாடு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது நன்றி துபாய்" என்று மாநாடு குறித்து பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 28 வது ஐ.நா., பருவநிலை உச்சி மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டிற்கு இடையே பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ், யுஏஇ அதிபர், நெதர்லாந்து பிரதமர், இத்தாலி பிரதமர் உள்ளிட்ட பல நாட்டு உலக தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
மாநாட்டை முடித்து கொண்டு டில்லி திரும்பிய பிரதமர் மோடி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛நன்றி துபாய், பருவநிலை உச்சி மாநாடு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. சிறந்த பூமியை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்'' எனக்கூறியதுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், உலக தலைவர்களை சந்தித்தது, அவர்களுடன் கலந்துரையாடியது, மாநாட்டில் பேசியது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)

Nation lover johnDec 5, 2023 - 04:19:04 PM | Posted IP 172.7*****