» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)
தேசிய தேர்வு முகமையின் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர்களே பணத்திற்காக நீட் தேர்வின் வினாத்தாளை விற்பனை செய்துள்ளனர் என்று சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அமைப்பின் 72 மூத்த அதிகாரிகள் மற்றும் 8 தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஜூலை 28-ம் தேதி சிபிஐ சார்பில் 94 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் NTA வினாத்தாள் தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத், வேதியியல் பேராசிரியர் பி.வி.குல்கர்னி, இயற்பியல் பேராசிரியை மணிஷா சஞ்சய் ஹவல்தார், பயிற்சி மைய இயக்குநர் சிவராஜ் ரகுநாத், இடைத்தரகர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:NTA வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த 3 பேராசிரியர்களும் வினாக்களை மனப்பாடம் செய்துள்ளனர். பின்னர் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பி, வினாக்களைக் கைப்பட எழுதியுள்ளனர்.
இந்த கையெழுத்துப் பிரதியை மகாராஷ்டிராவைச் சேர்ந்த இடைத்தரகருக்குப் பெரும் தொகைக்கு விற்றுள்ளனர். அவரிடமிருந்து ஹரியானா இடைத்தரகர்கள் மூலமாக டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக மாணவர்களுக்கு ஒரு வினாத்தாள் ரூ.12 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுவரை 92 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 360 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு சாதன ஆதாரங்களுடன் 20,000 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகச் சிபிஐ தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


