» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளின் ஊதுகுழல்: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடும் தாக்கு!
செவ்வாய் 28, ஜூலை 2026 10:54:59 AM (IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்ததாவது: "ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளிடம் விற்கப்பட்டவர்; அவர் அந்நிய சக்திகளின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார். அவர்களை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக அந்நிய நாட்டின் அமைப்புகள் உள்ளன. காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவருக்கு அந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.கடந்த 2004 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் ராகுல் காந்தி பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால், அவருடைய பயணங்கள் குறித்த எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. அவர் வெளிநாடுகளுக்குச் சென்று யாரைச் சந்திக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது மர்மமாகவே உள்ளது. அவருடைய வெளிநாட்டுப் பயணங்களில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை."
ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்த நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் கூறினார்.
ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், அவரது வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் குறித்தும் பாஜக தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ.29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!
வெள்ளி 31, ஜூலை 2026 5:52:38 PM (IST)

கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)


