» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
திங்கள் 27, ஜூலை 2026 12:28:52 PM (IST)

டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடித் தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடித் தாக்குதல்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்ததாவது: "அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மாணவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் முழு உரிமை வழங்கியுள்ளது. இந்த உரிமையைக் கட்டுப்பாடு என்ற பெயரில் காவல்துறை தடுக்கக் கூடாது.
வெறும் போராட்டங்களை மட்டுமே காரணம் காட்டி, மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்துவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதிகப்படியான பலத்தைப் பிரயோகிக்கக் கூடாது. போராட்டம் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்களோ அல்லது வன்முறைச் சம்பவங்களோ நிகழ்ந்தால் மட்டுமே காவல்துறை அதற்குத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விடுத்து அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது அதிகப்படியான பலத்தைப் பிரயோகிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் நாளை (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றம் முறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ.29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!
வெள்ளி 31, ஜூலை 2026 5:52:38 PM (IST)

கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)


