» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் அறிவிப்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 8:55:03 PM (IST)
இந்தியாவில் போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்யும் வகையில், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொளிச் செய்தியில் தெரிவித்ததாவது: "மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான சட்ட விதிகளைக் கொண்ட புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வரப்படுகின்றன.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், தொழில் நுட்பத்தைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். இக்குறைகளைக் களைந்து தேர்வுச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த, தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இனிவரும் தேர்வுகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும்."
நந்தன் நிலேகனி தலைமையிலான இந்த உயர்மட்டக் குழு: வினாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு முடிவுகள் வெளியீடு வரை முழுமையான ஆய்வு செய்யும். வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான நவீன தொழில்நுட்பப் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கும். தேர்வுகளின் போது தொழில்நுட்பப் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கும்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இச்சூழலில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று, தேர்வு முறையை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்கில் இந்த உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ.29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!
வெள்ளி 31, ஜூலை 2026 5:52:38 PM (IST)

கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)


