» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனை நிறுத்தி வைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 11:52:19 AM (IST)

கேரளாவில் நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இரு குற்றவாளிகளின் 20 ஆண்டுச் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று திருச்சூரில் இருந்து கொச்சிக்குக் காரில் சென்ற பிரபல நடிகை, மர்மக் கும்பலால் கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இவ்வழக்கில், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 5-வது மற்றும் 6-வது குற்றவாளிகளான சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் தங்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் வரை, தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்:
இந்த மனுக்களை விசாரித்த கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே. வி. ஜெயகுமார் அடங்கிய அமர்வு, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: "பொதுநலன், சமூகத்தில் இக்குற்றத்தால் ஏற்படும் தாக்கம் மற்றும் நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையைக் காக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, அதைத் துல்லியமாகச் செயல்படுத்தியதற்கும், அதில் சலீமும் பிரதீப்பும் ஒரே எண்ணத்தோடு உதவியதற்கும் போதுமான ஆதாரங்கள் முதற்கட்டமாக உள்ளன.
மேலும், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தவொரு தெளிவான தவறோ அல்லது சட்டமீறலோ இருப்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டத் தவறிவிட்டதால், தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த ஜூலை 9 அன்று இவ்வழக்கின் முதன்மை குற்றவாளியான ‘பல்சர் சுனி’ தாக்கல் செய்த தண்டனை நிறுத்த மனுவையும் உயர் நீதிமன்றம் மறுத்துத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இதே வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீப் உட்பட 4 பேரைச் செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


