» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்குத் தனித்தனி தேர்வறை: எஸ்பிஐ தேர்வில் எழுந்த வினோதச் சிக்கல்!
வெள்ளி 24, ஜூலை 2026 10:15:50 AM (IST)

ஐதராபாத்தில் தலையோடு தலை ஒட்டிப் பிறந்த வீணா - வாணி சகோதரிகளுக்கு, ஸ்டேட் வங்கி தேர்வு எழுதத் தனித்தனியாகத் தேர்வறைகள் ஒதுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி வீணா - வாணி என்ற இரட்டைச் சகோதரிகள் தலையோடு தலை ஒட்டிப் பிறந்தனர். வறுமை மற்றும் பராமரிக்க இயலாத சூழ்நிலை காரணமாகப் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர்களை, ஐதராபாத் நீலோபர் அரசு மருத்துவமனை பல ஆண்டுகள் பராமரித்து வந்தது. பின்னர் அமிர்பேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்தனர்.
இவ்விருவருக்கும் தலைப்பகுதியில் முக்கிய இரத்த நாளங்கள் இணைந்துள்ளதால், அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்து எனக் கூறி மருத்துவர்கள் பிரிப்பதைத் தடுத்துவிட்டனர். இதனால் இருவரும் இணைந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சாதனைக் கல்விப் பயணம்:
உடல் ரீதியான சவால்கள் இருந்தபோதிலும், பள்ளிப்படிப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். தொடர்ந்து பி.காம் (Business Analytics) பட்டப்படிப்பைச் சிறப்புடன் முடித்த இவர்கள், தற்போது சார்ட்டட் அக்கவுண்டன்ட் (CA) ஆவதற்காகத் தீவிரமாகப் படித்து வருகின்றனர்.
தலையோடு தலை ஒட்டிப் பிறந்துள்ளதால், தேர்வு எழுதும்போது இருவராலும் ஒரே நேரத்தில் குனிந்து கேள்வித் தாளையோ, விடைத் தாளையோ பார்க்க முடியாது. ஒருவருக்கு ஒருவர் சூழ்நிலைக்கு ஏற்ப உடலைச் சாய்த்துக்கொண்டே மாற்றி மாற்றியே தேர்வு எழுதுவார்கள். இத்தகைய கடினமான நிலையிலும், அரசு வழங்கிய கூடுதல் நேரச் சலுகையைக் கூட மறுத்து, சாதாரண மாணவர்களைப் போலக் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற உள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) போட்டித்தேர்விற்கு வீணா - வாணி இருவரும் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுதத் தகுதி பெற்ற இவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியானது. ஆனால், அதில் இருவருக்கும் தனித்தனி தேர்வறைகளும், தனித்தனி இருக்கைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஒட்டிப்ப பிறந்த இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அறைகளுக்குச் சென்று தேர்வு எழுதுவது சாத்தியமற்றது என்பதால், இம்மாணவிகள் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது.
வங்கி நிர்வாகத்திற்குக் கோரிக்கை: இதுகுறித்துத் தகவலறிந்த அவர்களின் முன்னாள் விரிவுரையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், "வீணா - வாணி இருவரும் ஒரே அறையில் அமர்ந்து தேர்வு எழுத வங்கி நிர்வாகம் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவின் கீழ், அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே தேர்வு மையத்தை மாற்றி அமைக்க வேண்டும்" எனச் தேர்வு நடத்தும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


