» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:35:16 PM (IST)
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும், நீதிமன்றங்கள் அரசியல் செய்வதற்கான இடம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் நிதி மோசடி விவகாரம் தொடர்பாகச் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இம் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் இன்று நடைபெற்றது.
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவிற்கிணங்க, இப் வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்தான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இப் வழக்கில் உண்மையைக் கண்டறியச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உபி காவல்துறை நடத்திய விசாரணையில் முதற்கட்டமாகக் குற்றம் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணையின் போது கருத்துத் தெரிவித்த தலைமை நீதிபதி சூரியகாந்த்:"இவ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நீதிமன்றங்கள் அரசியல் செய்வதற்கான இடம் அல்ல. இது ஒரு சாதாரணக் குற்ற வழக்கு மட்டுமே; இதில் முறையான விசாரணை நடப்பதை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் பணி என்றார். இதனைத் தொடர்ந்து, இப் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


