» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
21-வது நாள் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் : சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி!
சனி 18, ஜூலை 2026 12:40:37 PM (IST)
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த சோனம் வாங்சுக் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 21-வது நாளை எட்டிய நிலையில், அவர் டெல்லி போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டுச் சாஃப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படியும் அத்தியாவசிய மருத்துவச் சிகிச்சைக்காகச் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாஃப்டர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனம் வாங்சுக் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலின் முக்கிய அவயங்களின் செயல்பாடுகள் சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ, குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் அனுமதியின்றி அவருக்கு வாய்வழியாகவோ அல்லது ஊசி மூலமாகவோ எந்தவொரு சிகிச்சையையும் அளிக்கக் கூடாது எனத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அபிஜித் தீப்கே உண்ணாவிரதம்:
சோனம் வாங்சுக் அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக் குழுவைச் சேர்ந்த அபிஜித் தீப்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், ஜூலை 20-ம் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கிய அமைதிப் பேரணி நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் டெல்லி போலீஸார் ஊடகங்களைத் தடுத்துச் சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் சவுரவ் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஷ் மற்றும் சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் ஆகியோர் இநடவடிக்கைக்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


