» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் புதிய தங்கச் சுரங்கம்: ஆந்திராவில் 0.8 டன் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு!
வெள்ளி 26, ஜூன் 2026 11:24:32 AM (IST)

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தில் இருந்து நடப்பு நிதியாண்டில் (2026-27) 0.8 டன் (800 கிலோ) தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கத் திட்டமான இதனை ஜியோமைசின் மைனிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. ஜொன்னகிரி தங்கச் சுரங்கப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு மற்றும் ஆரம்பகட்ட கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அங்குத் தங்கம் பிரித்தெடுக்கும் ஆலை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இந்த ஆலை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலை பயன்பாட்டிற்கு வந்ததும், நாளொன்றுக்கு 1,500 டன் தாதுக்களைச் சுத்திகரித்து, ஆண்டுக்கு 0.8 டன் தங்கம் பிரித்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியாவின் தங்கம் இறக்குமதித் தேவை ஓரளவிற்கு உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ளது. திறந்தவெளிச் சுரங்க (Open-cast mining) முறையில் தாதுக்கள் எடுக்கப்பட்டு வரும் இந்த ஜொன்னகிரி திட்டத்தின் மூலம், கர்னூல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


