» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் எம்.எல்.ஏ.-விடம் தவறாக நடக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகர்: கேரள அரசியலில் பரபரப்பு
வெள்ளி 8, மே 2026 8:47:41 AM (IST)
கேரளாவில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தின் போது, பெண் எம்.எல்.ஏ. ஒருவருக்குக் காங்கிரஸ் பிரமுகர் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான 'இந்திரா பவனில்' நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ.-க்களைக் காங்கிரஸ் முக்கிய பிரமுகரான செரியான் பிலிப் என்பவர் நுழைவாயிலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார். அப்போது, கொல்லம் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் மாநில மகிளா காங்கிரஸ் தலைவியும், தற்போதைய எம்.எல்.ஏ.-வுமான பிந்து கிருஷ்ணா அங்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும் செரியான் பிலிப், கட்டிப்பிடித்து வரவேற்பது போல அநாகரிகமாக முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிந்து கிருஷ்ணா, அவரது கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து நகர முயன்றார். இருப்பினும், செரியான் பிலிப் விடாமல் மீண்டும் அவரைத் தொட முயன்றது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
இந்த அநாகரிகச் செயலை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், செரியான் பிலிப்பின் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, செரியான் பிலிப் உடனடியாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். கட்சித் தலைமையகத்தின் முன்பே நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஒரு பெண் மக்கள் பிரதிநிதிக்கே இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது கேரள அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:38:12 AM (IST)

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால் ஏற்கப்படும்: கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமார்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:17:16 AM (IST)


