» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கல்பாக்கம் அணு உலை சாதனை - இந்தியாவிற்குப் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:17:30 AM (IST)
தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் அதிவேக ஈனுலை அடுத்தகட்டமான 'நிலைமாறு' நிலையை எட்டியிருப்பது நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அகில இந்திய வானொலி மூலம் 'மனதின் குரல்' (மன்-கி-பாத்) நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கல்பாக்கம் அணு உலையின் சாதனையைத் தனித்துக் குறிப்பிட்டுப் பேசினார். இது குறித்து அவர் கூறுகையில்:"நமது அணு விஞ்ஞானிகள் மிகச்சிறந்த சாதனையை நிகழ்த்தி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். கல்பாக்கம் அணு உலை முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பது இதில் மிக முக்கியமான அம்சம். கடந்த மார்ச் மாதம் அங்கு மூலப்பொருள் ஏற்றப்படுவதை நேரில் கண்ட பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மக்களின் வாழ்வை மேம்படுத்த விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியவை."
மின் உற்பத்தியில் மைல்கல்: அணுசக்தி மட்டுமின்றி, இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தித் திறனும் 56 ஜிகாவாட்டைத் தாண்டிப் புதிய இலக்கை எட்டியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் மட்டும் 6 ஜிகாவாட் கூடுதல் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்லாது நாட்டின் எதிர்காலத்திற்கும் மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: நாட்டில் நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்துப் பேசிய பிரதமர், இது முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதாகத் தெரிவித்தார். 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை வெற்றியாக்க பொதுமக்கள் தங்களின் தகவல்களைச் சுய கணக்கெடுப்பு வசதி மூலம் தாங்களாகவே பதிவு செய்து ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வரும் மே 9-ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூரின் 165-வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதை நினைவு கூர்ந்த பிரதமர், அவரது கலைப் பங்களிப்புகளைப் போற்றினார்.
வடகிழக்கு மாநிலங்களில் செழித்து வரும் மூங்கில் பொருட்களை வாங்கி அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். கோடை விடுமுறையைச் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயனுள்ள வழிகளில் கழிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ.29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!
வெள்ளி 31, ஜூலை 2026 5:52:38 PM (IST)

கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)


