» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் கோர விபத்தில் 8 பக்தர்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி அறிவிப்பு
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:21:14 AM (IST)

ஆந்திராவில் இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்தில், பக்தர்கள் சென்ற வாகனம் டேங்கர் லாரி மீது மோதியதில் ஒரு சிறுமி உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தர்மபூர் சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 21 பக்தர்களை ஏற்றிக்கொண்டு மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திர சுவாமி மடத்திற்குச் சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ ஒன்று, எதிர்பாராதவிதமாக எதிர் திசையில் வந்த டேங்கர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மற்ற பயணிகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள பிரதமர், நிதியுதவியையும் அறிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் நிவாரணமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருதலைக் காதல் விவகாரம்: பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:18:12 PM (IST)

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
வெள்ளி 17, ஜூலை 2026 12:31:26 PM (IST)

நீட் விவகார உண்ணாவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் உடல்நிலை 19வது நாளில் கவலைக்கிடம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:05:48 PM (IST)

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் அமைவதைத் தடுக்க வேண்டாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:47:39 PM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவு இனி எளிது: புதிய அம்சங்களுடன் பீட்டா பதிப்பு அறிமுகம்!
வியாழன் 16, ஜூலை 2026 11:31:47 AM (IST)

தேசக் கட்டமைப்பிற்கு வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி புகழஅஞ்சலி!
புதன் 15, ஜூலை 2026 4:47:47 PM (IST)


