» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
வியாழன் 19, மார்ச் 2026 4:57:50 PM (IST)

மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது, இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து, கடந்த பிப்ரவரி 3-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அப்போது அவையில் காகிதங்களைக் கிழித்து எறிந்ததாகக் கூறி, விதிகளை மீறியதற்காக 8 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தார். இதில் அவையைச் சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கோரப்பட்டதுடன், எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றம்: நேற்று காலை மக்களவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
தலைவர்கள் வரவேற்பு
சசி தரூர் (காங்கிரஸ்): "இது ஒரு நல்ல முடிவு. சஸ்பெண்ட் பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது."
பிரியங்கா காந்தி (காங்கிரஸ் பொதுச்செயலாளர்): "வரவேற்கத்தக்க முடிவு. எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஆளும் கட்சி எம்.பி.க்களும் அவையில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும்."
ரவி கிஷண் (பாஜக): "அவையில் தனிநபர் தாக்குதல்களைத் தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மட்டுமே நடைபெற வேண்டும்."
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செல்போன் பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர் திடீர் மரணம்: கூட்டாளி கைது!
சனி 20, ஜூன் 2026 12:16:00 PM (IST)

நீட் தேர்வில் உச்சக்கட்ட தொழில்நுட்பக் கோளாறு : நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!
சனி 20, ஜூன் 2026 12:05:32 PM (IST)

நம்பகமான ஆதாரங்கள் இல்லை: தவெக அரசுக்கு எதிரான குதிரை பேரப் புகார் மனு தள்ளுபடி!
வெள்ளி 19, ஜூன் 2026 3:37:50 PM (IST)

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெள்ளி 19, ஜூன் 2026 12:17:49 PM (IST)

மேகேதாட்டு அணைத் திட்டத்தால் இரு மாநிலங்களுக்கும் நன்மை: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி!
வெள்ளி 19, ஜூன் 2026 10:26:04 AM (IST)

திருடனைப் பிடிக்காமல் வீட்டிற்குப் பூட்டுப் போடுவதா? டெலிகிராம் தடைக்கு எதிராக ராகுல் கடும் சாடல்!
புதன் 17, ஜூன் 2026 8:43:08 PM (IST)


