» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் கலப்படப் பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு: சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:58:49 AM (IST)
ஆந்திராவில் கலப்பட பால் குடித்து 4பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரி அருகே உள்ள நரசபுரம் கிராமத்தில், அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் 'வரலட்சுமி பால் பண்ணை' என்ற பெயரில் உரிமம் பெறாத பால் பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்தப்பண்ணையிலிருந்து விநியோகம் செய்யப்பட்ட பாலில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் கலக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நச்சு கலந்த பாலைப் பருகியதில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 106 குடும்பங்கள் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், பால் பண்ணை உரிமையாளர் கணேஸ்வர ராவை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பண்ணையில் இருந்த பால் மாதிரிகள் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு: இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் இது குறித்துப் பேசிய அவர்: "இந்தச் சோகச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்; இதை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது."
"பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" என அறிவித்தார். இந்தத் துயரச் சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நூறு விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ சவால்!
செவ்வாய் 26, மே 2026 12:53:57 PM (IST)

ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி: ஜனநாயகம் வென்றதாக பிரதமர் நெகிழ்ச்சி!
திங்கள் 25, மே 2026 5:30:51 PM (IST)

புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வரைவு அறிக்கை வெளியீடு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
ஞாயிறு 24, மே 2026 8:51:01 PM (IST)

பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி: 10 நாட்களில் 3-ஆவது முறையாக உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!
சனி 23, மே 2026 10:41:07 AM (IST)

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் – பாஜக அரசு ஒப்புதல்!
வெள்ளி 22, மே 2026 4:23:56 PM (IST)

மீண்டும் வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலைதளம்: சமூக ஊடகங்களில் பெரும் புயல்
வியாழன் 21, மே 2026 5:33:37 PM (IST)


