» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வரைவு அறிக்கை வெளியீடு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
ஞாயிறு 24, மே 2026 8:51:01 PM (IST)
ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வரும் புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்ற 100 நாள் வேலைத்திட்டம் ெகாண்டுவரப்பட்டது.
தற்போதைய மத்திய அரசு, அந்த திட்டத்தை சீரமைத்து, ‘வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்’ (வி.பி.-ஜி ராம் ஜி) என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பான மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, மேற்கண்ட புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. சட்டத்தின் 33-வது பிரிவு மற்றும் இதர பிரிவுகளின்கீழ், இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இவை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலங்கள், அமைப்புகள், நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விதிமுறைகளில், நிர்வாக செலவுகள், குறைதீர்ப்பு, சம்பளம் வழங்குதல், வேலைவாய்ப்பின்மை படி, சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் செலவுகள் ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:51:02 PM (IST)

தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:46:58 PM (IST)

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறப்பதில் என்ன பிரச்சனை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:59:02 AM (IST)

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:52:44 AM (IST)

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)


