» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விஜய் மீதான பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது : நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 5:16:38 PM (IST)


விஜய் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மீதான பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சநித்தார். அப்போது  "தமிழகத்தில் விஜய்யின் அரசியல் வருகையால் பயப்படுகிறீர்களா? என்றும் கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும். 

தி.மு.க. பயப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை பயமுறுத்துகின்றன. இந்த பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதை கலாசாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory