» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
வெள்ளி 30, ஜனவரி 2026 10:30:01 AM (IST)
உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டை தடுத்து சமத்துவத்தை ஊக்குவிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உருவாக்கிய புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக மிருத்துன்ஜய் இவாரி, வினீத் ஜிந்தர், ராகுல் இவான் தாக்கல் செய்த ரிட் மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் வாதிடும்போது, "யுஜிசியின் புதிய விதிமுறைகளின்படி சாதிய அடிப்படையிலான பாகுபாடு என்பது எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவு மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்கள் இந்த பாகுபாட்டில் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள விதிமுறையே பாகுபாடு பிரச்சினைகளை கையாள போதுமானதமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
மற்றொரு வழக்கறிஞர் நீரஜ் குமார் சிங் வாதிடும்போது, "யுஜிசியின் புதிய விதிமுறைகள் ராகிங் குறித்து எதுவும் பேசவில்லை. சாதிய அடிப்படையிலான பாகுபாடு குறித்து மட்டுமே பேசுகிறது" என்று தெரிவித்தார்.
ரோஹித் வெமூலா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய் சிங், யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு ஆதரவாக வாதிட்டார். புதிய விதிகளுக்கு இடைக்கால தடை விதிக்க தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி கூறியதாவது: சாதியற்ற சமூகத்தை சாதித்துள்ள நாம் பிற்போக்காளர்களாக மாறுகிறோமோ? சமூகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்கிறோம். சாதி மறுப்பு திருமணங்கள் நடந்து வருகின்றன. கடவுள் நிமித்தமாக இந்த பாகுபாட்டை செய்ய வேண்டாம். பாகுபாட்டை களைய ஏற்கவே விதிமுறைகள் இருக்கும்போது, புதிய விதிமுறைக்கான தேவை என்ன?
பல்கலைக்கழகங்களில் சமத்துவமான, சுதந்திரமான சூழலை உருவாக்க ஆலோசிக்கிறோம். புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டதற்கான முகாந்திரம் தெரியவில்லை. சமூகத்தை பிரித்தால் ஆபக்கான விளைவுகள் உருவாகும். யுஜிசியின் புதிய விதிமுறைகள் தெளிவாக இல்லை. இவை தவறான பயன்படுத்த வாய்ப்புள்ளது.
புதிய விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள நிபுணர்கள் ஆலோசனைகளை கூறலாம். தற்போதைய சூழலில் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த ரிட் மனுக்களுக்கு மத்திய அரசும், யுஜிசியும் விரிவான பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி உத்தரவிட்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 29, ஜனவரி 2026 5:23:49 PM (IST)

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!
வியாழன் 29, ஜனவரி 2026 12:46:13 PM (IST)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்ஸ் கைது!
வியாழன் 29, ஜனவரி 2026 8:24:37 AM (IST)

அஜித் பவார் விமான விபத்து குறித்து உரிய விசாரணை : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
புதன் 28, ஜனவரி 2026 4:08:44 PM (IST)

விமான விபத்து: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு!
புதன் 28, ஜனவரி 2026 10:24:59 AM (IST)

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்
செவ்வாய் 27, ஜனவரி 2026 5:28:13 PM (IST)