» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அஜித் பவார் விமான விபத்து குறித்து உரிய விசாரணை : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
புதன் 28, ஜனவரி 2026 4:08:44 PM (IST)
அஜித் பவார் விமான விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அஜித் பவாரின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்தேன். மராட்டிய துணை முதல்-மந்திரியும், அவரது சக பயணிகளும் இன்று காலை பாராமதியில் நடந்த ஒரு பேரழிவு தரும் விமான விபத்தில் உயிரிழந்தனர். நான் மிகுந்த இழப்பை உணர்கிறேன்.
அவரது மாமா சரத் பவார் உட்பட அவரது குடும்பத்தினருக்கும், மறைந்த அஜித் பவாரின் அனைத்து நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை” என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றவர்கள் மீதே கார் மோதி விபத்து - 8பேர் உயிரிழப்பு!
புதன் 6, மே 2026 11:28:44 AM (IST)

உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
புதன் 6, மே 2026 11:20:55 AM (IST)

முதல்வர்களை தேர்வு செய்ய பாஜக மேலிடம் தீவிரம்: அமித் ஷா, ஜே.பி. நட்டா நியமனம்!
செவ்வாய் 5, மே 2026 5:35:41 PM (IST)

அரை நூற்றாண்டு கால சகாப்தம் முடிவு: இந்தியாவில் இடதுசாரி ஆட்சியே இல்லாத சூழல்!
செவ்வாய் 5, மே 2026 11:24:49 AM (IST)

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி : வாக்காளர்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி!
செவ்வாய் 5, மே 2026 11:03:51 AM (IST)

மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கிறார் மம்தா : பெரும்பான்மையை விட பாஜக முன்னிலை!
திங்கள் 4, மே 2026 12:03:55 PM (IST)


