» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி வரவேற்பு

புதன் 10, டிசம்பர் 2025 4:22:25 PM (IST)

யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற யுனெஸ்கோவின் கூட்டத்தில், யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்தார்.

இதனை வரவேற்று பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.எங்களைப் பொறுத்தவரை, தீபாவளி நமது கலாச்சாரம் மற்றும் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது.

யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory