» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் பலி!
வியாழன் 6, நவம்பர் 2025 8:38:12 AM (IST)

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள சுனார் ரயில் நிலையத்தில் சோன்பத்ராவில் இருந்து வந்த கோமோ-பிரயாக்ராஜ் பர்வதி சோபன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 4-வது நடைமேடையில் வந்து நின்றது. அதில் இருந்து வந்த பக்தர்கள் கார்த்திகை பூர்ணிமாவையொட்டி கங்கையில் புனித நீராட வாரணாசி செல்வதற்காக சுனார் ரயில் நிலையத்தில் இறங்கினர்.
பக்தர்கள் ரயில்வே நடைபாலத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக எதிர் திசையில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல ரயில் தண்டவாள பாதையை கடந்தனர். அப்போது அந்த ரயில் தடத்தில் வேகமாக வந்த ஹவுரா-கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் பல பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 6 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக போலீசார், ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் சவிதா (28) சாதனா (16), ஷிவ் குமாரி (12), அஞ்சு தேவி (20), சுசிலா தேவி (60), கலாவதி (50) என அடையாளம் காணப்பட்டனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, உடனடியாக நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்
வியாழன் 6, நவம்பர் 2025 3:58:42 PM (IST)

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:33:53 AM (IST)

அரியானா வாக்காளர் பட்டியலில் புகைப்படம் : பிரேசில் மாடல் அழகி அதிர்ச்சி!
வியாழன் 6, நவம்பர் 2025 11:25:12 AM (IST)

தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மகன் தற்கொலை: குடிபோதையில் வெறிச்செயல்!
புதன் 5, நவம்பர் 2025 12:15:26 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு: மம்தா தலைமையில் பேரணி!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:43:30 PM (IST)

பொங்கல் பண்டிகைதோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதியுதவி: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:01:41 PM (IST)


.gif)