» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த்: பி.ஆர்.கவாய் பரிந்துரை!

திங்கள் 27, அக்டோபர் 2025 12:18:51 PM (IST)



உச்சநீதிமன்றம் புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமிக்க சட்ட அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடுத்த மாதம் 23ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணியை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கியுள்ளது.இந்நிலையில், உச்சநீதிமன்றம் புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமிக்க சட்ட அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்துள்ளார்.

தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக உள்ள சூரியகாந்த் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 2026 ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை தலைமை நீதிபதியாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory