» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 23, செப்டம்பர் 2025 12:29:59 PM (IST)
துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மனுவுக்கு மத்திய அரசும், தமிழக ஆளுநரின் செயலாளரும் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநரின் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவை அச்சுறுத்த முயன்றால் வலுவான பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
வியாழன் 2, அக்டோபர் 2025 4:29:02 PM (IST)

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!
புதன் 1, அக்டோபர் 2025 12:30:59 PM (IST)

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!
புதன் 1, அக்டோபர் 2025 11:41:27 AM (IST)

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
புதன் 1, அக்டோபர் 2025 11:31:27 AM (IST)

காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி: பிரதமர் மோடி வரவேற்பு
செவ்வாய் 30, செப்டம்பர் 2025 4:51:50 PM (IST)

கரூர் துயர சம்பவம்: விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:25:52 AM (IST)
