» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புதிய பலம், நம்பிக்கையை கொண்டு வரட்டும் : பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து

திங்கள் 22, செப்டம்பர் 2025 12:18:41 PM (IST)



நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று (புரட்டாசி மாதம் 6-ம் நாள்) ஆரம்பமாகிறது. இன்று முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory