» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தீபாவளியில் நாட்டு மக்கள் பெரிய பரிசு: சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 11:18:30 AM (IST)

சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.

79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "இந்த தீபாவளியை, நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். இந்த தீபாவளியில் நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசைப் பெறுவார்கள்... அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம்.

இது நாடு முழுவதும் வரி சுமையைக் குறைக்கும். தீபாவளிக்கு முன்னதாக இது ஒரு பரிசாக இருக்கும். அதற்கான குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி, மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும். இது சாமானிய மக்களுக்குப் பொருட்களின் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைக்கும். நமது சிறுதொழில் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள். அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மலிவாக மாறும், இது நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும். 

விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விண்வெளி சார்ந்த 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் உள்ளன.

நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட வேண்டும். நாம் பெரிதாக கனவு காண வேண்டும். அரசு துணை நிற்கும் நான் உங்களுடன் இருக்கிறேன். வரலாறு படைப்போம் இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory