» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு; 38 பேர் உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 9:09:36 PM (IST)



ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 38 பேர் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.  இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயமடைந்துள்ளனர் . 220க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளபெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: ஜம்மு கா​ஷ்மீர், கிஸ்த்வாரில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன, மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory