» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: பள்ளி முதல்வர், ஆசிரியைகள் உட்பட 8பேர் மீது வழக்கு
வியாழன் 10, ஜூலை 2025 12:23:40 PM (IST)
தானே அருகே மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை சம்பவத்தில் பள்ளியின் முதல்வர், ஆசிரியைகள் உட்பட 8பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையை அடுத்த தானே அருகே உள்ள சாகாப்பூரில் ஆர்.எஸ்.தமானி என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் மாணவ, மாணவியர் ஏராளமானோர் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்தப்பள்ளியில் உள்ள கழிவறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி பள்ளி ஆசிரியைகளிடம் தகவல் கூறப்பட்டது. இதற்கு காரணமானவர் யார்? என்பதை கண்டறிய 5 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கூட்ட அரங்கத்துக்கு வரவழைக்கப்பட்டனர். யாரும் உண்மையை ஒப்புக்கொள்ளாததால், 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் பலரை கழிவறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோரிடம் கூறினர். ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளிக்கு சென்று இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர். மேலும் போலீசில் புகார் அளித்ததன் பேரில் பள்ளி முதல்வர், ஆசிரியைகள், பெண் உதவியாளர் மற்றும் அறங்காவலர்கள் உள்பட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:58:15 PM (IST)

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை : தேர்தல் ஆணையம் மறுப்பு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:49:23 PM (IST)

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுண்ட்டரில் கொலை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:31:54 AM (IST)

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)
