» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வதோதராவில் பழமை வாய்ந்த பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்: 13 பேர் பலி
வியாழன் 10, ஜூலை 2025 8:02:50 AM (IST)

குஜராத் மாநிலம் வதோதராவில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா, ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய பாலம் ஒன்று கடந்த 1985-ம் ஆண்டு கட்டப்பட்டது. 23 தூண்களுடன் 900 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், வதோதரா-ஆனந்த் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கம்பீரா என்று அழைக்கப்படும் இந்த பாலத்தின் 15 மீட்டர் நீளமுள்ள பகுதி நேற்று காலை 7.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது.
அப்போது அந்த பாலத்தில் சென்ற 2 லாரிகள். 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தன. இதைப்பார்த்து அந்த வழியாக வாகனங்களின் வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
பாலத்தின் ஒரு பகுதி இடிந்ததால், ஆற்றுக்குள் விழுந்த வாகனங்களில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர். சிலர் தத்தளித்துக்கொண்டு இருந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணியில் உடனடியாக இறங்கினர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவினர்.
நீரில் மூழ்கியவர்களில் 13 பேர் பலியானார்கள். அவர்களது உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் 2 பேர் அண்ணன்-தம்பி என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே பாலத்தின் ஒரு பகுதியில் தொங்கிக்கொண்டு இருந்த 2 வாகனங்களை மீட்பு படையினர், பாதுகாப்புடன் இழுத்து வந்தனர். ஆற்றில் விழுந்த இருசக்கர வாகனத்தில் இருந்த 3 பேர் நீந்தி கரையேறினர். இந்த துயரச் சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், ‘குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் மாநில அரசும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் ஆணையம் பாஜக நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 11, ஜூலை 2025 3:47:41 PM (IST)

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)

ஏமனில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிமிஷா : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வியாழன் 10, ஜூலை 2025 12:44:26 PM (IST)
