» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது : கமல் பேச்சுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு!
புதன் 28, மே 2025 10:59:44 AM (IST)

தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்று பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறி கன்னட மக்களை கமல் அவமதுவிட்டதாக கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கூறுகையில், நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?. இன்று (நேற்று) நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்தீர்கள். உங்கள் மீது கருப்பு மை பூச நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் நீங்கள் ஓடிவிட்டீர்கள். கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராக பேசினால் உங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என எச்சரிக்கிறோம்" என தெரிவித்தார்.
மேலும் கமலஹாசனின் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. இதற்கிடையே கமலஹாசனின் தக் லைஃப் படத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் குறிப்பாக பெங்களூரில் தக் லைஃப் படத்தின் பேனர்களை கிழித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)

காதலனை பழிவாங்க திட்டம்: 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பெண் பொறியாளர் கைது!
புதன் 25, ஜூன் 2025 12:35:30 PM (IST)

கடந்த ஆண்டு 1.46 கோடி பாஸ்போர்ட்டுகள் வினியோகம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
புதன் 25, ஜூன் 2025 8:45:56 AM (IST)

இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து பிரதமர் மோடி: காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழாரம்..!
திங்கள் 23, ஜூன் 2025 5:03:00 PM (IST)

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு!
திங்கள் 23, ஜூன் 2025 12:21:25 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு: ஏா் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 11:47:26 AM (IST)
