» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி

ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை (மே 7) அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையான பஹவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தளமான முரிட்கே ஆகியவை அழிக்கப்பட்டன.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், பதற்றத்தைத் தணிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, பாகிஸ்தான் தாக்கினால் இந்தியா கடுமையான பதிலடி கொடுக்கும். சிந்து நதி நீர் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இயல்பு நிலையில்தான் இருக்கிறது. 

பாகிஸ்தான் சுட்டால் நாங்களும் சுடுவோம், தாக்கினால் நாங்களும் தாக்குவோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்காது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இந்தியா பதிலடி கொடுப்பதில் புதிய வழக்கம் ஏற்பட்டுள்ளது. இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அதிக விலை கொடுக்க நேரிடும். மேலும், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து பேசினால் பேசுவதற்கு தயார் என மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory